Advertisment

"பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்" - ஐஸ்வர்யா ராஜேஷ்

aishwarya rajesh speech at UNSTOPPABLE book release

Advertisment

பிவிஆர் குழுமத்தின் தெற்கு மண்டலத் தலைவராக இருந்தவர் மீனா சாப்ரியா. 'அன்ஸ்டாப்பபல் ஏஞ்சல்ஸ்' (UNSTOPPABLE ANGELS) என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார். இவர் தற்போது 'அன்ஸ்டாப்பபல்' (UNSTOPPABLE) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு பேசிய அவர், "முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்தபோது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

17 வயதில் திருமணமாகி20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்தபோது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார். சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், 'நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்' என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் 'அன்ஸ்டாப்பபல்' ஆக இருப்பது தான் காரணம்.

Advertisment

அதையே மீனா, புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியாஎன்று கூட கேட்டார்கள். அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்" என்றார்.

aishwarya rajesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe