Aishwarya Rajesh

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’, ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்கள் ரிலீசிற்குத் தயாராகி வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து, மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் விஷ்ணு விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, பின்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 'மோகன் தாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். இவர், 'களவு' படத்தின் இயக்குநர் ஆவார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.