'கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால்..' - ஐஸ்வர்யா ராஜேஷ் 

aishwarya rajesh

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள். என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார்" என்றார்.

kanaa sivakarthikeyan aishwaryarajesh arunrajakamaraja taamilcinemaupdates
இதையும் படியுங்கள்
Subscribe