முன்னணி நடிகருடன் மீண்டும் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

prabhu deva

‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா, தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் கல்யாண் இயக்குகிறார். இவர், பிரபுதேவா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'லக்ஷ்மி' படத்திற்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு தேவாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, பாண்டிச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தவிவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aishwarya rajesh
இதையும் படியுங்கள்
Subscribe