Advertisment

90 நிமிட பரபரப்பான பயணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

 Aishwarya Rajesh in 'driver jamuna' trailer released by sivakarthikeyan

'காக்கா முட்டை' படத்தின் மூலம் பலரின்கவனத்தைபெற்ற ஐஸ்வர்யாராஜேஷ்தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'மோகன்தாஸ்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.இதனைதொடர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'திகிரேட்இந்தியன்கிச்சன்' படத்தின் தமிழ்ரீமேக்கில்நடித்து வருகிறார். இதனிடையே எஸ்.பிசௌத்ரிதயாரிப்பில் 'டிரைவர்ஜமுனா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வத்திக்குச்சி' படத்தை இயக்கியகின்ஸ்லின்இப்படத்தை இயக்குகிறார்.ஜிப்ரான்இசையமைக்கும் இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்சமீபத்தில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'டிரைவர்ஜமுனா' படத்தின்ட்ரைலர்தற்போது வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனதுட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு பெண் ஓட்டுநர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்கிறாள், அதிலிருந்துஎப்படிதப்பிக்கிறாள் என்பதைஆக்ஷன்கலந்தத்ரில்லராகபரபரப்பான காட்சிகளுடன் விவரிப்பது போல் வெளியாகியுள்ளது இந்தட்ரைலர். மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்எனபடக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

actor sivakarthikeyan trailer.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe