Advertisment

"தொற்றுநோய்க்கு எதிரான நம் சிறந்த ஆயுதம் இதுவே!" - ஐஸ்வர்யா ராஜேஷ் 

xbfbndfbd

Advertisment

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை இன்று போட்டுக்கொண்டேன். உங்களுடைய டோஸை எடுத்துக்கொண்டீர்களா? நினைவில்கொள்ளுங்கள், தடுப்பூசிகள்தான்இந்தப் பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான நம் சிறந்த ஆயுதம்!" என பதிவிட்டுள்ளார். மேலும், இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

aishwarya rajesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe