fufughihih

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கரோனா 2ஆம் அலை குறித்து வீடியோ மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்...

Advertisment

"நாம் இப்போது கரோனா 2வது அலையில் இருக்கிறோம். இது நம் எல்லோருக்குமே தெரியும். முதல் அலையைவிட இரண்டாவது அலை நிறைய பேரை பாதித்துள்ளது. முக்கியமாக இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல பிரச்சினை உள்ளவர்களை நிறையவே பாதித்துள்ளது. தயவு செய்து வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். அப்படி ஒருவேளை அவசர தேவைக்காக வெளியே வர வேண்டும் என்றால் இரண்டு முகக்கவசம் போட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துங்கள். முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கரோனாவை வெல்வோம். மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம்'' என கூறியுள்ளார்.