Advertisment

பிரபல மலையாள பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்! ஷூட்டிங் ஆரம்பம்!

bdsbdsb

Advertisment

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5' புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. மலையாளத்தில் வெற்றிபெற்ற "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் - தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நிறைவேற்றுகிறாளா, திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை.

இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். சென்னையைத் தொடர்ந்து காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடை பெறுகிறது. இவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். 'மாஸ்கோவின் காவேரி' படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு 'வணக்கம் சென்னை', 'யூ- டர்ன்' மற்றும் பல படங்களில் நடித்தார். தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வரும் இவர் நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் சார்பாக எம்.கே ராம் பிரசாத் ஆகியோர்கூட்டணியில் இப்படம்உருவாகியுள்ளது.

aishwarya rajesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe