aishwarya rajesh about vijayakanth

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுழல் 2 வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெய்யின் கருப்பர் நகரம், விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது, தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

Advertisment

இந்த நிலையில் தாம்பரம் அருகில், ஒரு தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் பேசுகையில், “விஜயகாந்த் இறப்பு ரொம்ப வருத்தம் தான். நான் ஊரில் இல்லை. வந்தவுடன் இந்த விழாவிற்காக வந்துவிட்டேன். நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது சரி என்றால், அதை வைப்பதில் தவறில்லை. எல்லாருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும்.

Advertisment

மழை வெள்ள பாதிப்பால், எல்லாருமே உதவி செய்வது நல்ல விஷயம். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். நீங்க பண்ணவில்லையா... போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். நானும், உதவி செய்திருக்கேன். அதை வெளியில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நாம உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு தெரிய படுத்துவதும், நல்ல விஷயம் தான். அதை பார்த்து இளைஞர்கள் நிறைய பேர் உதவி செய்ய முன்வருவார்கள்” என்றார்.