aishwarya rai summoned Panama papers leak

Advertisment

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களைவாங்கிக் குவித்தவர்கள் பட்டியல்பனாமாஎன்ற ஆவணத்தின் பெயரில் வெளியாகி பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களின் பெயர்களும்இடம்பெற்றிருந்தன.இதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும்இடம்பெற்றன.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில்பனாமாஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத்துறை விசாரணையைமேற்கொண்டுவருகிறது. இவ்விவகாரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.