Skip to main content

ரஜினியுடன் மீண்டும் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

aishwarya rai joining rajinikanth film

 

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் இயக்கும்  புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 

இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'தலைவர் 169' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினி காந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியதால் சர்ச்சை; ராகுல் காந்திக்கு பா.ஜ.க கண்டனம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
BJP condemns Rahul Gandhi for Controversy for talking about Aishwarya Rai

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நுழைந்துள்ளது. இந்த பயணத்தின் போது, ராகுல் காந்தி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  “வாரணாசிக்கு சென்றபோது இரவில் மாணவர்கள்  போதையில் சாலையில் கிடந்ததைப் பார்த்தேன். இவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. 

ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவைப் பார்த்தீர்களா?. அங்கு ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முகம் தான் இருந்ததா?. அங்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் நரேந்திர மோடி தான் இருந்தனர். அனைத்து ஊடகங்களும், அம்பானி, அதானிக்கு சொந்தமானது. ஊடகங்களில் எதையாவது காட்ட வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராயின் நடனத்தை காட்டுகிறார்கள். அமிதாப்பச்சனை காட்டுகிறார்கள். ஆனால், ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் பிரச்சனைகளை காட்டப் போவதில்லை” என்று பேசினார். உத்தரப்பிரதேச மாணவர்கள் பற்றியும், ஐஸ்வர்யாராய் பற்றியும் ராகுல் காந்தியின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.