Published on 01/10/2018 | Edited on 01/10/2018

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள '2.O' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக அதிக பொருட் செலவில் சுமார் ரூ.543 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் 'வசீகரன்' கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.