தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, கடைசியாக நாயகியாக சூரிக்கு ஜோடியாக ‘மாமன்’ படத்தில் நடித்திருந்தார். பின்பு கமல் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது விஷ்ணு விஷாலுடன் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.   

Advertisment

இந்த நிலையில் ஐஸ்வர்யா லெட்சுமி, சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது இருக்கும் விளையாட்டில் நானும் இருக்க வேண்டும் என்றால் சமூக வலைதளம் என்பது மிகவும் அவசியம். இந்த கருத்தை நான் ஏற்கிறேன். குறிப்பாக நாம் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். எப்படியோ, நமக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லப்பட்ட ஒன்று, என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றியது.

302

என் வேலையில் இருந்து திசை திருப்பியது. என் உண்மையான சிந்தனையை பறித்தது. சின்ன சந்தோஷத்தை கூட மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. இணையத்தில் விருப்பப்படும் கற்பனைக்கு ஏற்ப என்னால் இருக்க முடியாது. ஒரு பெண்ணாக இங்கு இருக்கும் கட்டுபாடுகளை எதிர்க்க கடுமையாக முயற்சி செய்து வருகிறேன். அதனால் ஒரு நடிகையாகவும் ஒரு பெண்ணாகவும் ஒரு சரியான முடிவை எடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.