
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகஜால கில்லாடி', 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களின் பணிகள் நிறைவுற்று ரிலீசிற்குத் தயாராகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'மோகன்தாஸ்'. இப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்க, நடிகர் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். மேலும், கேக் வெட்டி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது படக்குழுவினருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கேக் ஊட்டிவிட்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)