hhfrbhf

Advertisment

கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையைக் குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் வாடிக்கையாகப் பார்த்துவரும் இந்தச் சூழலில், நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் நடிக்கும் ‘SSHHH’ஆந்தாலஜி படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடை குறைத்துள்ளார். பிக்பாஸ் 2 மூலம் புகழடைந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் ‘அலேகா’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘கூடவன்’, ‘கன்னி தீவு’, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படம் மற்றும் ‘மிளிர்’ முதலான படங்களில் நடித்து வருகிறார்.