fdhdfh

Advertisment

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு நடிகை கங்கனா ரணாவத் பலர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தற்போது மும்பை மற்றும் மகாராஷ்டிரா குறித்து அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இது மிக பெரிய சர்ச்சையாக மாறி கங்கானாவிற்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் அனுமதி பெறாமல் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டதால் மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

"கடவுள் பயம் கொண்ட ஒருவர் கூட இவ்வுலகில் இல்லை என்று என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கனவை உருவாக்கத் தெரிந்த ஒரு பெண் (கங்கனா ரணாவத்) மீண்டும் எழுச்சி பெற்று வருவார். இது மிக மிக தவறு. ஜனநாயகத்தின் மரணம்" என கூறியுள்ளார்.