Aishwarya Bhaskaran joins Bhagyaraj after 30 years

Advertisment

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இது அவரது தயாரிப்பில் உருவாகும் நான்காவது படமாகும்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கவினின் பெற்றோராக இருவரும் நடிக்கவுள்ளனர். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ராசுக்குட்டி படத்தில் பாக்யராஜ் - ஐஸ்வர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன்பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதுகுறிப்பிடத்தக்கது.