பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோன், தற்போது சபாக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த வருகிற ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

deepika padukone

நடிகை தீபிகா படுகோனுடைய 34வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாட அவரும் அவரது கணவருமான நடிகர் ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்து இறங்கினர்.

இவர்கள் வருவதை முன்னதாக அறிந்திருந்த பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவர்களை பேட்டி எடுப்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, அங்கே காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோன் வந்து இறங்கியதும் நீட்டினார்.

Advertisment

அதை பார்த்து இன்பதிர்ச்சியான தீபிகா படுகோன், அவர் வாங்கி வைத்திருந்த கேக்கை அங்கேயே வெட்டி கொண்டாடினார். தீபிகா கொண்டாடிய இந்த பிறந்தநாள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.