Advertisment

மலையாளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் தமிழ் நாயகி கறுப்பழகி!

கேப்ரியெல்லா செல்லஸ்... 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், 'டிக் டாக்'கில் எக்கச்சக்கமான ஃபாலோவர்ஸ் கொண்டவர். பொள்ளாச்சி துயர் குறித்து இவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ கடும் விவாதங்களை கிளப்பியது. 'ஐரா' படத்தில் நயன்தாராவின்இளம் வயது பாத்திரத்தில்இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பு, பரவலாகப் பாராட்டுகளை பெற்றது.தற்போது 'N4' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படி நடிப்புக் கலையின் பல வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் கேப்ரியெல்லா சமீபத்தில் நடித்த மலையாள ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/xA8Y52ppA7M.jpg?itok=lYhnFC9B","video_url":" Video (Responsive, autoplaying)."]}

'நீலி' என்ற பெயருடன் 'நீயும் கண்டோ பெண்ணே' என தொடங்கும் இந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதையும், பிறகு அதை எதிர்த்து எழ வேண்டுமென்பதையும்வலிமையாகப் படமாக்கியுள்ளது. இந்தப் பாடலின் வீடியோவில் கேப்ரியெல்லாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.

gabriella cellus

Advertisment

கேப்ரியெல்லா,கறுப்பழகி என்றே நண்பர்களால் குறிப்பிடப்படுகிறார், அதை தன் பெருமிதமாகக் கொள்கிறார். இவர், தனது காதலர் ஆகாஷை விரைவில் திருமணம் செய்துகொள்கிறார். ஆகாஷ், தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். தமிழில் வளர்ந்து வரும் நடிகையான இவர், மலையாளத்திலும் கவனமீர்க்கிறார்.

gabriella airaa Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe