நயன்தாரா நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் எதிர்பாராத எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இது அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் இன்னமும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இப்படத்தின் 'மேகதூதம்' சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து பட இயக்குனர் சர்ஜூன் பேசியபோது....
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
"இது நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார். கலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ளார்.