இந்தியாவில் வெளியாகும் ஏஐஆர் - பிரபல ஓடிடி நிறுவனம் அறிவிப்பு

AIR will premiere exclusively on Prime Video in India on May 12

அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம்ஏஐஆர் (AIR). இப்படம் கடந்த ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதில் நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக மாட் டாமன் மேவரிக் நடித்துள்ளார். மேலும் ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பென் அஃப்லெக் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது. இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் படத்தை பார்க்கலாம்.

amazon prime
இதையும் படியுங்கள்
Subscribe