90களின் பிரபலமான ‘மர்மதேசம்’ தொடரின் இயக்குநர் நாகா, ‘ஐந்தாம் வேதம்’ என்ற தலைப்பில் ஒரு சீரிஸ் இயக்கியிருக்கிறார். இந்த சீரிஸை அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருக்க சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது இந்த சீரிஸின் டீசர், தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது.