/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/404_20.jpg)
அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து சண்டைக் காட்சிகளில் அஜித் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/403_30.jpg)
இந்த நிலையில் தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் படக்குழு தற்போது, அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அஜர்பைஜான் மற்றும் பாகு ஆகிய பகுதிகளில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பை முடித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விடாமுயற்சி திருவினையாக்கும் எனவும் பதிவிட்டு குரூப் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)