பிகில் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ. 65 லட்சம் நிதியுதவி! 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

bigil

இந்நிலையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு பெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதேபோல தமிழக முதலமைச்சர் நிவாரணநிதி மற்றும் பிஎம் கேர்ஸ் (PM CARES)ஆகியவற்றிற்கும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாத்துறையின் பிரபலதயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நிவாரண நிதி வழங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும் பெப்சி சங்கத்திற்கு ரூ. 15 லட்சமும் நிதி வழங்கியுள்ளது.

ags cinemas bigil
இதையும் படியுங்கள்
Subscribe