/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/150_25.jpg)
ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அகிலன். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 'ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.
இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் குறுகிய காலத்தில் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியுள்ளது ஜீ5 நிறுவனம். ‘அகிலன்’ படத்தின் கதைக் கருவில் வரும் கப்பல் நங்கூரம் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இந்த நங்கூரத்தை குறிப்பிட்ட நேரம் தூக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜீ5 தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளனர். பலரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அகிலன் படத்தின் விழாவைக் கொண்டாடினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)