Agent Teena Vasanthi Interview

விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய நடிகை வசந்தி அவர்களோடு ஒரு சிறப்பு நேர்காணல்...

Advertisment

தினேஷ் மாஸ்டரிடம் நடன அசிஸ்டெண்டாகபல வருடங்கள் வேலை செய்தேன். நடிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியது லோகேஷ் சார். என்னுடைய சகோதரிகளும் டான்ஸர்கள் தான். அவர்களைப் போல் எனக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. தினேஷ் மாஸ்டர் எப்போதும் தன்னுடைய அசிஸ்டெண்டுகளை விட்டுக்கொடுக்க மாட்டார். நல்ல அறிவுரைகள் தருவார். நயன்தாரா மேடம் எப்போதும் சரியாக இருப்பார். டைமிங் உட்பட அனைத்து விஷயங்களையும் சரியாகப் பின்பற்றுவார். த்ரிஷா ரொம்ப ஸ்வீட். அப்போது இருந்தது போலவே தான் அவர் இப்போதும் ஜாலியானபாசிட்டிவான ஒருவராக இருக்கிறார்.

Advertisment

ஏஜென்ட் டீனா கேரக்டரைபார்த்துவிட்டு கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, நயன்தாரா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார் உட்பட பலரும் பாராட்டினர். விக்ரம் படத்தில் நடிக்கத் தொடங்கியபோது முதலில் எனக்கு பயமாக இருந்தது. உதவி இயக்குநர்கள் எனக்கு மிகவும் உதவினர். படம் ரிலீசான பிறகு கிடைத்த வரவேற்பில் எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது. படத்தில் என்னுடைய முதல் ஷாட்டே கமல் சாரோடு தான். கமல் சார் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். என்னுடைய நடிப்பையும் பாராட்டினார்.

லியோ பட ஷூட்டிங்கின்போது விஜய் சார் விக்ரம் படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். பொதுவாக விஜய் சார் ரிகர்சலில் ஆட மாட்டார். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார். டேக்கில் நன்றாக ஆடுவார், தூள் கிளப்புவார். சூர்யா சாரும் இப்போது நன்றாக ஆடுகிறார். சிம்ரன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் எங்களுடைய வீட்டுக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நான் வேலை செய்திருக்கிறேன். மலையாளத்திலும் நடித்திருக்கிறேன். பிரெஞ்சு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அனைத்திலும் நான் தமிழ் கேரக்டர் தான் செய்கிறேன்.

Advertisment