agent movie producer apologies for his movie result

Advertisment

அகில் அக்கினேனி, சாக்‌ஷி வைத்யா, மம்முட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 28.04.2023 அன்று திரையரங்குகளில் வெளியான படம் 'ஏஜென்ட்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் இப்படத்தைத்தயாரிப்பாளரான அனில் சுங்கரா, படம் தோல்வியடைந்தற்காக மன்னிப்பு கேட்டார்.

அவர் கூறுகையில், "முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்குச் சென்றோம். கரோனாவால் பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதற்காக எந்த சாக்குப்போக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த விலையுயர்ந்த தவறில் இருந்து பாடம் கற்றுள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால் இந்த இழப்பை ஈடுகட்டுவோம்." என்றிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற 19ஆம் தேதி (19.05.2023) வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான 21 நாட்களில் இப்படம் வெளியாகவுள்ளது.