/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/97_14.jpg)
ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே. இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. தெலுங்கில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் மனோஜ் பீடா இயக்க, சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று (15.10.2021) வெளியிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)