Skip to main content

மாமனிதனுக்காக சீனு ராமசாமிக்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Again an international award for Seenuramasamy for Maamanithan

 

எதார்த்தத்தைத் திரையில் பிரதிபலிக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரே. அவர்களில் மிக முக்கியமான இயக்குநர் சீனு ராமசாமி. மனித வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அதன் இயல்புகளோடு திரையில் உலவ விடும் சீனு ராமசாமிக்கு தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்த திரைப்பட விழாவில் அளித்திருக்கும் கௌரவத்தின் மூலம் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 'மாமனிதன்' படத்திற்காகக் கிடைத்திருக்கும் இன்ஸ்பிரேசன் ப்யூச்சர் பிலிம்  விருது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

விருது வழங்கும் விழாவில் பேசிய சீனு ராமசாமி, "இயற்கை என்னை ஆசீர்வதிக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கு வருவதற்கு அவர்தான் எனக்கு உதவினார். என்னுடைய தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை நான் இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். கடந்த 15 நாட்களாக நான் இங்கு இருக்கிறேன். இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

நடிகர் அவதாரமெடுக்கும் இயக்குநர் சீனுராமசாமி; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

 

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.