After watching dada movie wife expressed her desire live with her husband

Advertisment

சிங்கிள் மதர் ஒருவர் தனக்கு அனுப்பிய வாட்சப் சாட்டை பொதுவெளியில் பகிர்ந்துள்ள ‘டாடா’ பட இயக்குநரின் ட்வீட் ஒன்றுசோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில்கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாடா'. ரிலீஸுக்கு முன்பாகவே திரைப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் ப்ரிவீவ் ஷோ திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி பேச, ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியிலும் அப்ளாசை அள்ளியது டாடா. சமீபத்தில் வெளியான இப்படம்.,ஃபீல் குட் காதல் கதை லிஸ்டில் இடம்பிடித்துவிமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுவரும் ‘டாடா’வுக்கு பின்னணியில் இருக்கும் கணேஷ் கே பாபுவை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

அதே ஆச்சரியத்துடன் படக்குழுவை சந்தித்த நடிகர் கமலஹாசனும் தனது அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்திலேயே முரட்டு ஹிட் கொடுத்துள்ள இயக்குநரை, கோலிவுட் வட்டாரம் சும்மா விடுமா என்ன... டாடா படத்துக்கு கிடைத்த முதல் நாள் ரெஸ்பான்சை வைத்தே, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன் இயக்குநர் கணேஷ் கே பாபுவுடன் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை போட்டுள்ளது. லைகா நிறுவனம் தற்போது கமலின் இந்தியன் - 2, ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் 62வது படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதற்கிடையில், இயக்குநர் கணேஷ் கே பாபுவின் ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தன் குழந்தையை தனியாக வளர்க்கும் தாய் ஒருவர், டாடா படம் பார்த்த பிறகுதனது கணவருடன் சேர இருப்பதாக இயக்குநரிடம்வாட்சப்பில் உருகியுள்ளார். இதை அவரின் அனுமதியோடு, அவரது அடையாளத்தை மறைத்துவிட்டு இயக்குநர் பதிவிட்டு... ‘இதுதான் எனக்கு கிடைத்த உண்மையான வெற்றி’ எனநெகிழ்ச்சியாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் இயக்குநரை பாராட்டிஅந்த பதிவை ரீட்வீட் செய்து வருகின்றனர்.