தயாரிப்பு நிறுவனம்; தோனியை அடுத்து களம் இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

after dhoni jadeja start a movie production company

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிசமீபத்தில் தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப் படுத்தினார். அதில் முதல் தமிழ் படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். கதாநாயகியாக இவானா நடிக்க நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தோனியை தொடர்ந்து தற்போது ரவீந்திர ஜடேஜாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தனது மனைவியுடன் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த நிறுவனத்தின் முதல் படம் இந்தியில் உருவாகிறது. அப்படத்தில் ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா, குல்ஷன் குரோவர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'பச்சட்டர் கா சோரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜெயந்த் கிலதார் என்பவர் இயக்குகிறார்.

இப்படம் ஒரு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் கூறி படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MS Dhoni ravindra jadeja
இதையும் படியுங்கள்
Subscribe