After a decade Meera Jasmine make his re entry in tamil and telugu

மாதவன் நடிப்பில் வெளியான 'ரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயாஎன முன்னணி நடிகரோடு ஜோடி போட்டார். இதனிடையே ஆயுத எழுத்து, சண்டக்கோழி என ஹிட் படங்களை நடித்து முன்னணி நடிகையாகவலம் வந்தார். பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து வந்த மீரா ஜாஸ்மின்மலையாளத்தில் மட்டும் சில படங்களில் கவனம் செலுத்தினார்.

Advertisment

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் 'விமானம்' படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'விஞ்ஞானி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் 2013ல் வெளியான 'மோக்‌ஷா' படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு மொழிகளில் மீண்டும் நடித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.