அஸர்பைஜான் நாட்டில் ஜெயம் ரவியின் 26வது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

jeyam ravi

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹ்மது. இவர்தான் ஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயம் ரவியின் 25வது படத்தை லட்சுமணன் இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஷூட்டிங் உருவாகி வருகிறது, தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் 30 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து வருகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஜெயம் ரவியின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லட்சுமணன் இயக்கி வரும் ஜெயம் ரவியின் 25வது படத்தின் ஷூட்டிங் கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையிலிருந்த அஹ்மத் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 'ஜன கன மன' என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக தாப்ஸி, ஜெயம் ரவிக்கு நாயகியாக நடித்து வருகிறார்.

Advertisment

முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லட்சுமண் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் ஜெயம் ரவி.