Advertisment

இரண்டு நடிகைகள் ஒப்பந்தமாகி வெளியேறிய படம்; மூன்றாவதாக களமிறங்கும் மடோனா

after anupama parameshwaran now madonna sebastian in dj tillu 2

தெலுங்கில் மாலிக் சர்மா இயக்கத்தில் சூர்யதேவரா நாக வம்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'டிஜே தில்லு 2'. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றி பெற்ற 'டிஜே தில்லு' படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தில் சித்து ஜோன்னலகட்டா கதாநாயகனாக நடிக்க, முதலில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு சில காரணங்களால் ஸ்ரீ லீலா படத்திலிருந்து விலகிவிட்டார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து இரண்டாவதாக அனுபமா பரமேஸ்வரன் கமிட்டானார். ஹைதராபாத்தில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பில், கதாநாயகனுக்கும் அனுபமாவுக்கும் சில காரணங்களால் வாக்கு வாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்திலிருந்து அனுபமா விலகினார்.

Advertisment

இந்நிலையில் ஸ்ரீ லீலா, அனுபமா பரமேஸ்வரன் என இரண்டு நடிகைகளும் வெளியேறியதால் இப்போது அந்த கதாபாத்திரத்திற்கு மடோனா செபஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe