after ak 62 movie ajith planned to world tour

அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

Advertisment

பாங்காக்கில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இந்நிலையில் 'ஏகே 62' படத்தை முடித்துவிட்டு தனது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வர அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் அடங்கிய ஒரு மெகா பிளானை அஜித் வரையறுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அஜித்தின் 'ஏகே 63' படம், 'ஏகே 62' படம் வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளியாகும் எனத்தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.