23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்காநினைவுகளாகப் பல பாடல்களைத்தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ilaiyaraja ramarajan
இதையும் படியுங்கள்
Subscribe