Skip to main content

18 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கூட்டணியின் சிங்கிள் இன்று வெளியாகிறது....

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
sarvam thaala mayam


ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனாக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். பிறகு மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் படங்களை இயக்கி, தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனர் என்ற இடத்தை பெற்றார். மேலும் திரைப்படங்கள் எடுப்பார் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு, ராஜிவ் மேனன் பல வருடங்களாக ஏமாற்றியே வந்தார். காலங்களும் ஓடியது. 
 

சுமார் 18 வருடங்கள் கழித்து ராஜிவ் மேனன், ‘சர்வம் தாள மயம்’என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இத்திரைப்படம் முழுக்க முழுக்க இசை சம்மந்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. கடந்த மாதம் டோக்யோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் கலந்துகொண்டு,  பலரால் பாராட்டப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

தற்போது சர்வம் தாள மயம் படம் உலகம் முழுவதும் டிசம்பர் 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ட்ராக்  இன்று மாலை நான்கு மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ராஜிவ் மேனன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியானது என்னவோ இரண்டு படங்கள்தான், ஆனால் அந்த படத்திலுள்ள இசையின் மூலம் தமிழகத்தையே 21 வருடங்களாக ஆட்சி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்