Samuthirakani

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏலே'. இப்படத்தைபிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துடன் இணைந்து இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். படம் காதலர் தினத்தையொட்டி வெளியாக இருந்த நிலையில், ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழ, படம் நேரடியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ef163e27-fec9-4e58-8c2f-c03f0acbdf37" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_30.png" />

Advertisment

இந்த நிலையில், 'ஏலே' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று (05.03.2021) வெளியாகியுள்ளது. இத்தகவலை, தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.