முடிவுக்கு வராத தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை! - 'ஏலே' தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Samuthirakani

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏலே'. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து புஷ்கர்-காயத்ரி தயாரித்துள்ளனர். படம், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. படம் நாளை வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, தயாரிப்பு தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், 'ஏலே' திரைப்படம் பிப்ரவரி 28-ஆம் தேதி பகல் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'திரையரங்குகளில் வெளியாகும் படத்தினை, 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை தயாரிப்பு தரப்பு அளித்த பின்னரே படம் திரையரங்கில் வெளியிடப்படும்'எனத்திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கொண்டுவந்துள்ள புதிய விதிக்கு, தயாரிப்பு தரப்பு உடன்படாததே, பட வெளியீடு குறித்த இந்தத் திடீர் முடிவிற்குக் காரணமாகும்.

இதையும் படியுங்கள்
Subscribe