ஹலிதாஷமீம் -அருள்தேவ்
வித்யாசாகருடன் பல நூறு திரைப்படங்கள்...பாகுபலி 2, நடிகையர் திலகம் உள்ளிட்ட பிரம்மாண்டபடங்கள்... இசைக்கோர்ப்பு எழுதி இசையமைக்கக்கூடிய திறனுள்ள வெகுசிலஇசையமைப்பாளர்களில் ஒருவர்... இப்படி ஸ்ட்ராங்கான பின்னணியுடன் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அருள்தேவ். 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பி' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின்'ரெட்டசட கூப்புடுதே முத்தம்மா' பாடல் ரூரல் வைரல்ஹிட். சமீபத்தில் சரிகமாதயாரிப்பில்'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே' பாடலைநவீனமாக்கி இசையமைத்திருந்தார் அருள்தேவ். 2 மில்லியனுக்கும் மேலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது அந்தப் பாடல்.
'சில்லுக்கருப்பட்டி' வெற்றிக்குப் பிறகு ஹலிதாஷமீம் இயக்கிய'ஏலே' நேரடியாக விஜய்டிவியில் வெளியானது. சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இப்படத்தில் அருள்தேவின் பின்னணி இசை பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி பரபரவென இயங்கிவரும் அருள்தேவுக்கு நாளை (05 மார்ச்2021) ஒரு முக்கிய நாளாகஅமையவிருக்கிறது. நாளை, இவர் இசையமைத்துள்ள 'மிருகா' திரைப்படம் வெளியாகிறது. ஸ்ரீகாந்த், லக்ஷ்மிராய் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் புலி முக்கியஇடம் பெறும்ஃபாரஸ்ட் அட்வென்ச்சர் திரைப்படமாகும்.
அதே நாளில்இவர் இசையமைத்துள்ள குறும்படமான 'ஸ்வீட்பிரியாணி' 'ONVI movie' என்ற புதிய OTT தளத்தில் வெளியாகிறது. இக்குறும்படத்தை இயக்கியிருப்பவர், ஏற்கனவே 'டுலெட்' என்ற குறும்படத்துக்காக பல நாடுகளில்திரைப்பட விழாக்களில்விருது பெற்றவரானஜெயச்சந்திர ஹாஷ்மி. இதில்புகழ்பெற்றஆர்ஜேவும்ப்ராங்க் நிகழ்ச்சி நடத்துபவருமான சரித்திரன் நடித்துள்ளார். மேலும் நாளை 'ஏலே' திரைப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது. இப்படி, ஒரே நாளில் மூன்று லட்டு சாப்பிடும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அருள்தேவ்.