'அடியே நீதானடி...'  பேச்சிலர் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்! 

gv prakash

சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சிலர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத்தடைப்பட்டது.

தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள படக்குழு, படத்தை விரைந்து திரைக்குக் கொண்டுவரும் நோக்கோடு இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அடியே நீதானடி...' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை ஜி.கே.பி எழுத, கபில் கபிலன் பாடியுள்ளார்.

GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe