கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்க சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து படம் வெளியாகும் வரை சர்ச்சையாகவே இருந்தது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

aditya

இதனை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் எடுக்க தொடங்கினார்கள். தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஈ4 எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை வாங்கியிருந்தது. முதலில் பாலா இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் முடிந்து, படம் ரிலீஸ் ஆகும் அளவிற்கு வந்தடைந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து முதலிலிருந்து தொடங்குவதாகவும் அதற்கும் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று படக்குழு அறிவித்தது. பனித்தா சந்துவை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விறுவிறுப்பாக தொடங்கிய ஷூட்டிங் நேற்று முடிவடைந்துள்ளது. இதை துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகர் விக்ரமே படம் எடுத்திருக்கிறார்.