"என் வாழ்வில் சினிமாவைக் கொண்டு வந்த மனிதருக்கு வாழ்த்து" - அதிதி ஷங்கர்

aditi shankar wishes shankar

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்டோர்களை இயக்கி அப்படங்களை வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி படங்களாக்கியவர் இயக்குநர் ஷங்கர். இயக்குவது மட்டுமில்லாமல் 'காதல்', 'வெயில்', 'கல்லூரி' உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்தும் உள்ளார். ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர் தற்போது ராம்சரணின் 'ஆர்சி 15' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் ஷங்கருக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அந்த வகையில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "என் வாழ்வில் சினிமாவைக் கொண்டுவந்த மனிதருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்தியப் படங்களின் முன்னோடி, நீங்கள் திரையில் உங்கள் கற்பனையை கொண்டுவரும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார், ஆனால் எப்போதும் என் அப்பாவாக இருப்பதற்கு முதலில் பெரிய நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கார்த்தி நடிப்பில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள 'விருமன்' படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுவருகிறது.

aditi shankar director Shankar
இதையும் படியுங்கள்
Subscribe