/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/130_34.jpg)
சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/134_76.jpg)
இப்படத்தை தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மத்தியில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இதே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)