Advertisment

சிம்புவுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள்!

aditi shankar joining silambarasan starring corona kumar movie

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இயக்குநர்கோகுல் 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களைஇயக்கியுள்ளார்.

Advertisment

இப்படம் குறித்தஅதிகாரபூர்வஅறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியான நிலையில், படத்தின் கதாநாயகி குறித்ததகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளார். இவர்தற்போது கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் பிசியாக நடித்துவருவதால், இப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் ‘கொரோனா குமார்’ படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor simbu aditi shankar corona kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe