Advertisment

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர்?

aditi shankar is heroine of vishnu vishal ram kumar untitled movie

'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' பட வெற்றிக்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில்விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கைகோத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க காதல் கலந்த ஃபேண்டஸி ஜானரில் உருவாவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகிகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'விருமன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது.

Advertisment

அதிதி ஷங்கர், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார். மேலும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை வைத்து விஷ்ணுவர்தன்இயக்கும் படத்தில் நடித்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

actor vishnu vishal aditi shankar Ramkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe