Advertisment

லீட் ரோலில் அதிதி ராவ்

aditi rao in rajesh m selva next film

Advertisment

கமல்ஹாசனின் ‘தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. சைமன் கே கிங் இசையமைக்க, படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, மேலும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.

aditi rao hydari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe