irumbu thirai.jpeg

aditi balan

'அருவி' படத்தின் மாபெரும் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நடிகை அதிதி பாலன். இப்படத்தில் இவர் நடித்த நடிப்பிற்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் அருவியில் தனக்கு கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள எண்ணி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்தையும் நடிகை அதிதி பாலன் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் இதுவரை சுமார் 150 படங்களுக்கு மேலாக கதை கேட்டு நிராகரித்துள்ளார். இதுவரை அவரை திருப்தி படுத்துகிற மாதிரி எந்த கதையும் அமையாததால் இன்னும் எந்த படத்திலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனால் இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்றும், மேலும் வித்தியாசமான, அதே நேரத்தில் தனக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்றும் பிடிவாதமாக தன் முடிவில் உறுதியாக உள்ளார் அதிதி பாலன்.

Advertisment