Advertisment

பிரபாஸின் பிரம்மாண்ட படம்; புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு 

Adipurush movie new release date announced

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன்சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர்ஓம் ராவத் இயக்கி வருகிறார்.

Advertisment

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமேவெளியாகும் என படக்குழு அறிவிருந்த நிலையில் கரோனாபரவல் காரணமாக படத்தின் ரீலீஸ் தள்ளிப்போனது.

Advertisment

இந்நிலையில் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 12ஆம்தேதி வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் வரும் 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Adipurush prabhas radhe shyam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe