Advertisment

"குரானையோ பைபிளையோ தொடக்கூடாது" - ஆதிபுருஷ் படக்குழுவினரை எச்சரித்த நீதிமன்றம்

adipurush issue high court slams movie makers

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாகப் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. அந்த வகையில் இப்படத்தில் வசனங்கள் சர்ச்சையை உருவாக்குவதாக இரண்டு பொதுநல மனுக்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடந்த விசாரணையில் படக்குழுவினருக்கு, "படத்தில் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் இல்லை என பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்... அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா" என சரமாரி கேள்வியை எழுப்பியது.

Advertisment

மேலும் "தணிக்கை குழு அதன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டதா?" எனக் கேள்வி கேட்டு தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர்ஏன் ஆஜராகவில்லை எனக் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தணிக்கைக்குழு வாரியம் ஆகியவை படத்திற்கு எதிரான மனுக்களுக்குபதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு, "நீங்கள் குரானையோ பைபிளையோ தொடக்கூடாது. எந்த மதத்தையும் தொடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறேன். தயவுசெய்து மதங்களை தவறான கோணத்தில் காட்டாதீர்கள். நீதிமன்றத்திற்கு மதம் இல்லை. குரானில் தவறான விஷயங்களைச் சித்தரிக்கும் ஒரு சிறிய ஆவணப்படத்தையாவது நீங்கள் எடுத்தால், பிறகு என்ன நடக்கும் என்பதை பாருங்கள்" என்று கூறியது.

Adipurush allahabad prabhas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe